முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்
முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்
ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான் ஓஹோ
ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்
வீரன் வீரன் வீரன் வீரன்
எங்க மாமன் வீரன்
ஆலமர வேர போல
ஆழம் ஆன வீரன்
ஆட்டம் காண வைக்க போறான்
ஆட்டுக்குட்டி தேரன்
நாட்டு தலைவன்
மோட்சம் கொள்கிறான்
மீசைவச்ச மிருக மிருகனே
முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்
தொம்ச விதம் தொம்ச விதம்
இம்சைமொழி
அம்சமென அம்சமென
வம்சவழி
வந்தரசன் வந்தரசன்
கம்சமுகன் நான்
நக்கீரனின் நக்கீரனின்
புத்திரனே
நித்தமுடன் நித்தமுடன்
சத்தியனே
முத்து நிகர் முத்து நிகர்
ஒற்றை மகன் நான்
பாலகனே பாலகனே
பாலகனே பாலகனே
அண்டங்களின் அண்டங்களின்
சுற்றுகளை
கண்டங்களை கண்டங்களை
வென்றெடுத்து
கொண்ட ஒரு கொண்ட ஒரு
கோமகன் நான்
என்னிகராய் என்னிகராய்
விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில்
சந்திரனாய்
மந்திரனாய் மந்திரனாய்
வந்தவனோ யார்
கத்தும் கடல் கத்தும் கடல்
எட்டும் தொட
சூரியனை சூரியனை
தொட்டு இட
வட மதுரை வலம் வருவேன் நான்
எண்ணம் இல்லையா
திண்ணம் இல்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய
கூச்சமில்லையா
தொல்லை செய்வதா
பிள்ளை வைவதா
பள்ளி கொல்வதா
நீ கட்டுமுள்ளில் வெட்டி போல
மாட்டி கொள்வதா
ஏ ஐய்யாரே ஐயாறே
ஆடுவோமா குய்யாரே ஹோ
ஏ தையா தையா
த்தையாரே ஹோ
ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்
ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்…